மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை + "||" + Suicide

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர்,டிச.1.
முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சதீஷ் (வயது 29). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர் முகநூல் மூலம் கோவையை  சேர்ந்த ஹேமா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ் மனைவி ஹேமாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
மதுரை கே.புதூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. விஷம் குடித்து தற்கொலை: மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்
பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. ஆய்வக உதவியாளர் தற்கொலை
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.