மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு + "||" + Theft of 2 motorcycles

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் தனசேகரன்(வயது 28). இவர் கடந்த 28-ந் தேதி இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் தனது மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள தனது சித்தப்பா தங்கதுரை வீட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தங்கதுரையின் மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மறுநாள் காலை அவர் அங்கு சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. அருகில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது
உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2. ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்
ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. மோட்டார் சைக்கிள் திருட்டு
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.
5. 4 ஆடுகள் திருட்டு
ராமநாதபுரம் அருகே 4 ஆடுகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.