பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தாத்தா, தண்ணீரில் மூழ்கி சாவு


பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தாத்தா, தண்ணீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:21 AM IST (Updated: 1 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தாத்தா, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமங்கலம் வடகரையை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 52). இவருடைய மகன் மகேந்திரன். இந்தநிலையில் மகேந்திரனின் இரு மகன்களான 9 வயது மற்றும் 12 வயது சிறுவர்களை அழைத்து கொண்டு நீச்சல் கற்று கொடுப்பதற்காக கண்மாய்க்கு முனியாண்டி சென்றார். கோட்டைப்பட்டி அருகே உள்ள மொட்டை பத்தான் கண்மாயில் தனது பேரன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்தார். இந்தநிலையில் முனியாண்டி திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story