மாவட்ட செய்திகள்

கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + To flood

கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
விருதுநகர், 
விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. 
பரவலாக மழை 
தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 516.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பரவலாக பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அருப்புக்கோட்டை 34, சாத்தூர் 38, ஸ்ரீவில்லிபுத்தூர் 49, சிவகாசி 65, விருதுநகர் 53, திருச்சுழி 39, ராஜபாளையம் 32, காரியாபட்டி 18.8, வத்திராயிருப்பு 59, பிளவக்கல் 31, கோவிலாங்குளம் 72.4. 
மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மீட்டரில் வருமாறு:-
 பிளவக்கல் பெரியாறு 9.5., கோவிலடி 9.45. வெம்பக் கோட்டை 3.9, கோல்வார்பட்டி 3.25, ஆனைக்குட்டம் 4.6, குல்லூர்சந்தை 1.75, இருக்கன்குடி 3.7, சாஸ்தா கோவில் 8.6.
வெள்ளப் பெருக்கு 
தொடர் மழை காரணமாக எப்போதுமே வறண்டு கிடக்கும் விருதுநகர் கவுசிகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.
 இந்நிலையில் விருதுநகர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார் கவுசிகா நதியின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தங்கி கொள்ளலாம் என பள்ளிவாசல் ஜமாத்தார்அறிவித்துள்ளனர். மேலும் விருதுநகரில் லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையில் மழைநீர் புகுந்ததால் பஸ்களை வளாகத்திற்குள் நிறுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு 
 விருதுநகர் சிவகாசி ரோட்டில் பைபாஸ் ரோடு சந்திப்பில் மழைநீர் தேங்கி பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
 மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. பள்ளி குழந்தைகள் பள்ளிகளில் இருந்து தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில மாணவர்கள் நனைந்துகொண்டே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2. தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
3. அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4. தென்காசியில் பரவலாக மழை; குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்குள்ள பாலாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, வைகையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.