கூலித்தொழிலாளி சாவு: சித்த மருத்துவர் உள்பட 3 பேர் கைது
சித்த மருத்துவர் உள்பட 3 பேர் கைது
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவைகுளத்தைச் சேர்ந்த பேச்சி மகன் மாரி (வயது 24). கூலித்தொழிலாளி. கடந்த மாதம் மாரி காய்ச்சலுக்காக ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றுள்ளார். அங்கு மாரியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்தநிலையில் தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் பேச்சி புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மாரி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த டாக்டர் உள்ளிட்டோரை கைது செய்யும் வரை மாரி உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குனர் வெங்கட்ரெங்கன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
நேற்று மாலை சீல் வைக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தநிலையில் சித்த மருத்துவர் சக்தி, அவரது நண்பர் சித்த மருத்துவ கல்லூரி மாணவர் அருண்குமார் ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர். ஏற்கனவே செவிலியர் இசக்கியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாரியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள சம்மதித்ததைத் தொடர்ந்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story