மாவட்ட செய்திகள்

அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை + "||" + Corona Vaccine

அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை

அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை
தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை என கலெக்டர் கூறினார்.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்கள் வைத்திருப்போரும் தங்களது பணியாளர்கள் அனைவரும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி 100 சதவீதம் போட்டுக் கொண்டு அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் தங்கள் தொழிற்சாலைகளில் வைத்திருக்க வேண்டும். ஆய்வின்போது காட்ட வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி போடுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பின் ஆய்வின்போது நிறுவனத்தின் பணியாளர்கள் யாரேனும் உரிய காரணங்களின்றி தடுப்பூசி போடவில்லை என்றால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூடப்படுவதோடு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், வணிகர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளித்து புதிதாக வரும் ஒமிக்ரான் பரவுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!
ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
3. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்: அசாம் முதல்-மந்திரி பேச்சு
தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
4. தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு
தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி