பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:42 AM IST (Updated: 1 Dec 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.கட்சியின் வர்த்தக அணியின் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி அண்ணாதுரை, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கஜேந்திரன், சிவமுருகன் உள்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தலின் போது கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்ற கோரியும், குடும்ப பெண்களுக்கு ரூ.1000 கொடுக்க கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும் பா.ஜ.க.வினர் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க.வினர் சிவகாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்று அதிகாரியை சந்தித்து சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசு டவுன்பஸ்கள் பைபாஸ்ரோடு, காமாக்ரோடு, இரட்டைப்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி வரும் டவுன் பஸ்களும் இதே வழிதடத்தில் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
அதேபோல சிவகாசி பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் கடந்த 1 மாதமாக திறக்கப்படவில்லை. இந்தநிலையில் சரவெடிக்குவிதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலசுப்பிரமணியம், தேவா, மகாலட்சுமி, வேம்புலுசாமி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருத்தங் கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணி, பாண்டி, ஜோதிமணி, மாரிச்சாமி, சங்கரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story