பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்


பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:43 AM IST (Updated: 1 Dec 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டண உயர்வு

பெங்களூருவில் சுமார் 1.25 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பெட்ரோல் மற்றும் ஆட்டோ கியாஸ் விலை உயர்வு காரணமாக கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசின் போக்குவரத்துத்துறை ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. 

அதன்படி பெங்களூருவில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 ஆக உள்ளது. அது ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது.அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் ரூ.13-ல் இருந்து ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 5 நிமிட காத்திருப்புக்கு பிறகு 15 நிமிடங்கள் வரையிலான காத்திருப்புக்கு கட்டணம் ரூ.5 வசூலிக்கலாம். 

கூடுதலாக 50 சதவீதம்

20 கிலோ வரையிலான சரக்கிற்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் எடை கொண்ட சரக்கிற்கு ரூ.5 வசூலிக்கலாம். அதிகபட்சமாக 50 கிலோ வரை சரக்குகளை ஆட்டோவில் எடுத்து செல்லலாம். ஆட்டோ டிரைவர்கள் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் மீட்டரில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதுவரை கட்டணம் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு தெரியும் வகையில் ஒரு அட்டையில் எழுதி வைக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் பயணிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

Next Story