மதுரையில், நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை
மதுரையில் நள்ளிரவில் மழை கொட்டி தீர்த்தது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மதுரை,
மதுரையில் நள்ளிரவில் மழை கொட்டி தீர்த்தது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மாடக்குளம் கண்மாய்
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து உள்ளது. இருப்பினும் சராசரியான 400 மி.மீட்டரில் இதுவரை 370 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது. மதுரை நகரில் பெய்த தொடர் மழையால் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்து மேடும், பள்ளமாக காட்சி அளிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு மாடக்குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதே போல் புறநகர் பகுதிகளான மேலூரில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்து உள்ளது. அங்கு இன்னும் பல இடங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 6 மணி வரை கொட்டி தீர்த்தது. பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இரவு முழுவதும் நல்ல மழை பெய்தாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நிலை இருந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை என நேற்று காலை 6 மணிக்கு கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்தார். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மதுரை மாவட்டத்தில் மொத்தம் 844.20 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதில் சராசரி 42.21 மி.மீட்டர் ஆகும்.
மழையளவு
மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில் விவரம் வருமாறு:-
சிட்டம்பட்டி- 42.60, கள்ளந்திரி- 34.20, தனியாமங்கலம்- 68.90, மேலூர் - 47., சாத்தையாறு அணை - 15.00, வாடிப்பட்டி - 26., திருமங்கலம் - 32.60, உசிலம்பட்டி- 61., மதுரை வடக்கு- 40.80, தல்லாகுளம்-31.50, விரகனூர்-54.80, மதுரை விமான நிலையம்-61., இடையபட்டி- 62., புலிப்பட்டி - 28.20, சோழவந்தான் - 40., மேட்டுப்பட்டி-25., குப்பணம்பட்டி - 40., கள்ளிக்குடி - 52.80, பேரையூர் - 53.60, ஆண்டிப்பட்டி - 27.20 ஆகும்.
நேற்று மாலையிலும் மதுரை மாநகரில் அவ்வப்போது சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் தூறலுடன் மழை பெய்தது. மழையின் காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story