கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது - பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு
மீஞ்சூரை அடுத்த மணலி புதுநகரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை சென்னை மாநகராட்சி முகாம்களில் தங்க வைத்துள்ளது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள மணலிபுதுநகர் சடையங்குப்பம் பகுதிகள் கொசஸ்தலை ஆற்றின் வடிநில பகுதி ஆகும். தாழ்வான பகுதியாக இருந்து வருகிறது. இங்கு சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் வல்லூர் அணைக்கட்டில் 38 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறநது விடப்பட்டது.
இந்த வெள்ளம் மணலி புதுநகர் முழுவதும் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகளில் அரசு அலுவலகங்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாமலும் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்களை அங்கு மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகிறது.
தொடர் மழையாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்காலும் மணலிபுதுநகர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story