ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் வாகன சோதனை


ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் வாகன சோதனை
x
தினத்தந்தி 1 Dec 2021 7:34 PM IST (Updated: 1 Dec 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் வாகன சோதனை

தளி, 
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் வாகன தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 
சோதனை சாவடி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் செல்கின்ற வாகனங்களை சோதனை இடுவதற்காக ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில் வனத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறையினரும் சின்னார் சோதனைச்சாவடியில் அமராவதி வனத்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புகின்ற நபர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.அத்துடன் சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய- மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளது.அந்த வகையில் கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுகாதாரத் துறையினர் இணைந்து வாகனஓட்டிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
உடல் வெப்ப நிலை
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்  கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மேலும் தெர்மல்ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் உடலில் அதிகமாக வெப்பம் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்துடன் வாகனங்களுக்கு கிருமினாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.இந்த பணியில் வனத்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story