திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது
x
தினத்தந்தி 1 Dec 2021 7:43 PM IST (Updated: 1 Dec 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கல்வியியல் கல்லூரி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியானது 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு குழுவின் B+ சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.
இளங்கலை கல்வியியலில் ஆங்கிலம், கணிதம், ெபாருளியல், உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், செடி உயிரியல், உயிர் தொழில் நுட்பம்) பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் இயற்பியல், பயன்பாட்டு வேதியியல்), வணிகவியல் பாடப்பிரிவுகள் கற்றுத்தரப்படுகின்றது. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம், பொருளறிவியல் பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். 
பேராசிரியர் குழு
பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். திறமை வாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்வி நுட்பவியல், கணினி ஆய்வகங்கள், வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரிய பயிற்சி வழங்கப்படுகிறது. 
மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றது. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்று உள்ளனர். 
மாணவர் சேர்க்கை
மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி உள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வுக்கான (TET) பயிற்சியும், ஆராய்ச்சி கல்விக்கான (NET) தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. 
தற்போது பி.எட். வகுப்பில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220576 மற்றும் 9486381123 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் தெரிவித்து உள்ளார்.

Next Story