தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Dec 2021 8:22 PM IST (Updated: 1 Dec 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சாலையில் தேங்கும் மழைநீர்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் ஊராட்சி வாய்க்கால்பட்டறை காலனி பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் புகுந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீ.தமிழ்ச்செல்வன், வெண்ணந்தூர், நாமக்கல்.

சேலம் மாநகராட்சி பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பழைய காலனி  பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் பல வருடங்களாக சாக்கடை கால்வாய் நீர் செல்ல வழி இல்லாமல் வெளியேறி தெருவில் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி மலேரியா, டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதுபற்றி புகார் தெரிவித்தும் பலன் இல்லை. எனவே சாக்கடை நீர் முறையாக வெளியேற கால்வாய் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், காந்திநகர், சேலம்.

தண்ணீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு செயல்படாத தண்ணீர் டேங்க் 2 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. மீதி நாட்களில் இந்த ஆழ்துளை கிணற்றை நம்பிதான் இருக்க வேண்டிய உள்ளது. இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து தண்ணீர் டேங்கை சரிசெய்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், தாரமங்கலம், சேலம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை-1 தினசரி மார்க்கெட் அருகில் கூலிலைன் பகுதி 23-வது வார்டில் நீண்ட நாட்களாக குடிநீர் செல்லும் மெயின் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் தினமும் குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மேட்டூர் அணை,சேலம்.

இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வேளாண்மை அலுவலக கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து கொசுக்கள் மற்றும் விஷ பூச்சிகள் வாழும் இடமாக மாறி உள்ளது. மேலும் கட்டிடத்தின் அருகில் மரம் முளைத்து கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே பாலக்கோடு வேளாண்மை அலுவலக கட்டிடம் அருகில் வளர்ந்திருக்கும் மரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பாலக்கோடு, தர்மபுரி.

ஆபத்தான கிணறு
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா வங்களியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு திறந்த நிலையில் காணப்படுகிறது. இதன் அருகில் பள்ளி மாணவர்கள் நின்று விளையாடுகின்றனர். திடீரென யாராவது தவறி கிணற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த கிணற்றை மூட வேண்டும். இல்லையென்றால் கிணற்றுக்கு மூடி போட வேண்டும்.
-ஏ.உதயநிதிசரவணன், வங்களியூர், சேலம்.

தார் சாலை சீரமைக்கப்படுமா?
சேலம்-எடப்பாடி ஒன்டிப்பனை பஸ் நிலையம் அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஊர்மக்கள், ஒன்டிப்பனை.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின்பின் பகுதியை ஒட்டி தொடங்கும் தார் சாலை 2 கி.மீ. தூரத்தில் தடங்கம் பகுதியில் தர்மபுரி- சேலம் 4 வழி சாலையில் இணைகிறது. இந்த சாலையை தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தார் சாலையில் பெரும் பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், பாரதிபுரம், தர்மபுரி.

தெருநாய்கள் தொல்லை 
கிருஷ்ணகிரி மாவட்டம் இண்டர்ஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.

சேலம் அழகாபுரம் அம்பேத்கர் காலனியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துவிட்டன. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் தெருநாய்கள் மீது மோதி கீழே விழுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அழகாபுரம், சேலம்.

ஆபத்தான மின்கம்பம்
சேலம் வெள்ளக்கல்பட்டி மின்சார வாரியம் அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து மிகவும் ஆபத்தான  நிலையில் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வெள்ளக்கல்பட்டி, சேலம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அவுசிங் போர்டு பகுதி அக்ரி நகர் 3-வது தெருவில் 30 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
- ஊர்பொதுமக்கள், அக்ரி நகர், தர்மபுரி.
வேகத்தடை வேண்டும்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜக்கசமுத்திரம்-பொம்மனூர் செல்லும் தார் சாலையில் அரசு மருத்துவமனை, அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையம், ரேஷன் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.  எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த ஜக்கசமுத்திரம்-பொம்மனூர் செல்லும் தார் சாலையில் ஆங்காங்கே சிறு சிறு வேகத்தடை அமைத்துத் தர வேண்டும்.
-ஊர்மக்கள், ஜக்கசமுத்திரம், தர்மபுரி.

Next Story