கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
குமரலிங்கம்,
குமரலிங்கம் அருகே கன்னியம்மன் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியல் உடைப்பு
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் அருகே சாலரப்பட்டி பகுதியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் கோவில் பூட்டியே இருக்கும். இந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 35) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பூஜைகள் முடிந்து இரவு கோவிலை பூசாரி பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை கோவில் வெளிக்கதவை திறந்து கோவில் பூசாரி உள்ளே சென்று கிரில் கதவை திறக்க முயன்றார். அப்போது கிரில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் கோவிலின் உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ரூ.10 ஆயிரம் கொள்ளை
உடனடியாக இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், "இரவு நேரத்தில் கோவிலில் புகுந்து பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கும் என்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story