வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி
x
தினத்தந்தி 1 Dec 2021 10:03 PM IST (Updated: 1 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது வெள்ளத்தில் தொழிலாளி அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

கம்பம்: 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது நண்பர்களுடன் கம்பம் சுருளி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாறு தொட்டம்மன்துரை தடுப்பணைக்கு சென்றார். அங்கு சசிகுமார் ஆற்றில் இறங்கி குளித்தார். தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், சசிகுமாரால் நீந்தி கரையேற முடியவில்லை. இதனால் தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டார்.


 இதுகுறித்து அவருடன் சென்ற நண்பர்கள், கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இரவு நேரமாகியதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) முல்லைப்பெரியாற்றின்  கரையோரப்பகுதி வழியாக அவரை தேடும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். 


Next Story