‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:14 PM IST (Updated: 1 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும் சகதியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் பொன்னிநகர் உள்ளது. இந்த நகரில் உள்ள தெருக்கள் சேதமடைந்து காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால்  தற்போது அந்த சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை  சீரமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், பட்டமங்கலம்.

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா போழக்குடி பகுதியில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன் வாடிமையம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த அங்கன்வாடி மையம் சமூக நல கூடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பழைய அங்கன்வாடி கட்டிடம் மேலும் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் அருகில் நடுநிலைப்பள்ளி உள்ளதால் மாணவ- மாணவிகள் அங்கன்வாடி மையம் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய அங்கன்வாடி மையத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
-பொதுமக்கள், போழக்குடி, நன்னிலம்.

நாய்கள் தொல்லை

மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர்  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றி திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் சில நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதேபோல் நீடூர் பகுதியிலும் நாய்கள் தொல்லை அதிக அளிவில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கங்கணம்புத்தூர், மயிலாடுதுறை.

Next Story