மகளிர் நலச்சங்கத்தினர் தர்ணா


மகளிர் நலச்சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 1 Dec 2021 10:42 PM IST (Updated: 1 Dec 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

அரசு கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் நலச்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேனி: 

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சங்கிலி கருப்பன் தண்ணீர் பாறை கல் உடைக்கும் மகளிர் நலச்சங்கத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் கவுரி தலைமை தாங்கினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு கல் குவாரிகளை மகளிர் சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகை உரிமம் வழங்க வேண்டும், கல்குவாரியில் உள்ள 6-வது பகுதியை தங்களின் சங்கத்துக்கு வழங்க வேண்டும், ஏல நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள், கலெக்டர் முரளிதரனிடம் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story