ஆலங்குடி அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


ஆலங்குடி அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 1 Dec 2021 11:00 PM IST (Updated: 1 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். குப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று வீட்டை விட்டு வெளியேறி இருவரும் ஆலங்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு தரும்படி ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு பிரச்சினை செய்யக்கூடாது என்று கூறினர். 

Next Story