மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்ஒரே மாதத்தில் 1,204 பேருக்கு கொரோனா8 பேர் பலியான பரிதாபம் + "||" + corona 8 died

நாமக்கல் மாவட்டத்தில்ஒரே மாதத்தில் 1,204 பேருக்கு கொரோனா8 பேர் பலியான பரிதாபம்

நாமக்கல் மாவட்டத்தில்ஒரே மாதத்தில் 1,204 பேருக்கு கொரோனா8 பேர் பலியான பரிதாபம்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1,204 பேருக்கு கொரோனா 8 பேர் பலியான பரிதாபம்
நாமக்கல், டிச.2-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 1,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 8 பேர் பலியானதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் 2-வது அலை முடிவுக்கு வந்த நிலையில், நாமக்கல் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்னும் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் தினசரி சராசரியாக 40 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி கடந்த மாதம் 1-ந் தேதி வரை 52,290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 51,301 பேர் குணமாகி வீடு திரும்பி இருந்தனர். 498 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். கடந்த 30-ந் தேதி பாதிப்பு எண்ணிக்கை 53,494 ஆக அதிகரித்தது. அதே சமயம் குணமான நபர்களின் எண்ணிக்கையும் 52,512 ஆகஅதிகரித்தது.
ஒரே மாதத்தில் 1,204 பேருக்கு பாதிப்பு
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 1,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருவதால், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த கலெக்டர் ஸ்ரேயா சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 704 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,914 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 58,914 ஆக அதிகரித்து உள்ளது.
2. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 559 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
3. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
4. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 57 ஆயிரத்தை தாண்டியது மூதாட்டி பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
5. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,698 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56,698 ஆக அதிகரித்து உள்ளது.