நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி தோத்தரமேரி தலைமை தாங்கினார். வாணியம்பாடி சார்பு நீதிபதி ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் நிலுவகையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், பிடிவாரண்டு நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கவும், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு கோப்புகளை உடனுக்குடன் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் மற்றும் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story