சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு திருவள்ளூர் போலீசார் நிதி உதவி

திருச்சி, டிச.2-
நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த மாதம் இரவு ரோந்து பணியில் இருந்த போது 21-ந்தேதி அதிகாலை ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் பூமிநாதனின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்து 600 வசூல் செய்யப்பட்டது. இதை பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா ஆணி கிறிஸ்டி திருச்சியில் உள்ள பூமிநாதனின் இல்லத்திற்கே நேரில் சென்று அவருடைய மனைவி மற்றும் மகனிடம் வழங்கினார்.

Related Tags :
Next Story