நிரம்பும் தருவாயில் பெரியகுளம் கண்மாய்
தொடர்மழையினால் பெரியகுளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில கண்மாய் மற்றும் குளங்கள் மறுகால் பாய்கின்றன. மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் அந்த தண்ணீர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயை வந்தடைகிறது. இதனால் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது. மேலும் பெரியகுளம் கண்மாய் மதகு களிலிருந்து தண்ணீர் வெளியேற தொடங்கி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பெரியகுளம் கண்மாய் முழுமையாக நிறைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பெரியகுளம் கண்மாயை நம்பி சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கண்மாய் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை விட மிக பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story