தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழைநீர்
சேத்தூர் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து மழைநீர் செல்கிறது.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பூங்கொடி கண்மாய் நேற்று முன்தினம் மாலை நிரம்பி வழிந்தது. இந்த கண்மாய் பகுதிக்கு தேவதானம் வாண்டையார் குளம் கண்மாய் நிரம்பியதால் மதகு வழியாக தண்ணீர் இங்கு வந்தது. சொக்கநாதன் புத்தூரில் இருந்து இனாம் கோவில்பட்டிக்கு செல்லும் சாலை இடையே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நடந்தும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த தரைப்பாலத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சொக்கநாதன்புத்தூர் பூங்கொடி கண்மாய் அருகில் உள்ள தரைப்பாலத்தை வாகனங்கள் எளிதாக செல்ல சிறிய பாலமாக கட்டித்தர நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story