10 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளி கண்மாய் நிரம்பியது
10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய நள்ளி கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வயல்களில் தேங்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சாத்தூர்,
10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய நள்ளி கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வயல்களில் தேங்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கண்மாய் நிரம்பியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் எண்ணற்ற கண்மாய்கள், குளங்கள், தெப்பம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. அதேபோல அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நள்ளி கண்மாய் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் வேதனை
கண்மாய் நிரம்பியதால் வடக்குதோட்டிலோவன்பட்டி, கலிங்கப்பட்டி ஆகிய ஊர்களுக்குள் நீர் புகாமல் இருப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது வயலுக்குள் புகுந்தது. இதனால் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மீனாட்சிபுரம், சிவனைந்தபுரம், வடக்குதோட்டிலோவன்பட்டி, தோட்டிலோவன்பட்டி, கலிங்கப்பட்டி கஞ்சம்பட்டி, குமாரபுரம், நள்ளி ஆகிய கிராமங்களின் நீர் ஆதாரமாக கருதப்படும் இந்த கண்மாயில் நீர் வெளியேறுவதால் பொதுமக்களும் வேதனையுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story