அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 2 Dec 2021 1:31 AM IST (Updated: 2 Dec 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

நலவாரியங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 18 நல வாரியங்கள் மூலம் 1,332 பேருக்கு ரூ. 23 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்,  அசோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், தொழிலாளர்நலத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story