சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 2:20 AM IST (Updated: 2 Dec 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியானார்கள்.

சேலம், டிச.2-
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 14 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 4 பேர், வீரபாண்டி மற்றும் கொளத்தூரில் தலா 3 பேர், மேச்சேரி, ஓமலூர், சேலம் ஒன்றியம், ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, நரசிங்கபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேருக்கும், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 499 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலத்தை சேர்ந்த 70 வயது முதியவரும், 45 வயதான பெண்ணும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்தநிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story