2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 35). பேட்டை கருங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தன ராஜ் மகன் இசக்கிமுத்து (23). இவர்கள் 2 பேரும் நெல்லை மாநகர பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்ததால், நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரையும் கைது செய்து நாங்குநேரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனுக்கு, மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர், அதனை ஏற்று இசக்கிமுத்து உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story