108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது
108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
நெல்லை:
நெல்லை அருகே, 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் ஆனது. அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
நிறைமாத கர்ப்பிணி
நெல்லை மாவட்டம் முனைஞ்சிபட்டி அருகே மாயனேரியைச் சேர்ந்தவர் முத்துகுட்டி (வயது 27). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற அபிராமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று அதிகாலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை முனைஞ்சிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்சில் பிரசவம்
பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி பகுதியில் சென்றபோது அபிராமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பெண் பணியாளர், பிரசவம் பார்த்தார். இதில் அபிராமி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தொடர்ந்து தாய், குழந்தை இருவரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story