சென்னை போலீசாருக்கு சைபர் குற்றங்களை தடுக்கும் மேம்பாட்டு பயிற்சி

சென்னை போலீசாருக்கு சைபர் குற்றங்களை தடுக்கும் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 2 Dec 2021 2:46 PM IST (Updated: 2 Dec 2021 2:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடத்தப்படும் பயற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. இதில் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். பயிற்சி முகாமை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போலீசாருக்கு சைபர் குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது உள்ளிட்டவற்றில் நவீன மேம்பாட்டு பயிற்சி முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் 6 கல்லூரி மையங்களில் ஒரு குழுவுக்கு 2 நாட்கள் வீதம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி மூலம் 1,600 பேர் பலன் அடைவார்கள்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடத்தப்படும் பயற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. இதில் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். பயிற்சி முகாமை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் சைபர் குற்றங்களில் புலனாய்வு திறமையை மேம்படுத்துவது, தடயங்களை நவீன முறையில் சேகரிப்பது போன்றவை தொடர்பாக நவீன முறையில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் பிரபாகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story