கழிவுநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று மாலை திடீரென பேப்பர் மில்ஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கே.சி. கார்டன் பகுதியில் தொடர் மழையால் அங்குள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. கழிவுநீரும் அதில் கலந்து இருந்தது. தற்போது மழைநீர் வடிந்து விட்டாலும் வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் புகார் அளித்து 2 நாட்கள் ஆகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று மாலை திடீரென பேப்பர் மில்ஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடுபாபு மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரி விஜயபிரகாஷ் ஆகியோர் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story