கோவில்பட்டி இலுப்பையூரணி தாம்போதி பாலத்தை மழைநீர் மூழ்கடித்து ஓடிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது


கோவில்பட்டி இலுப்பையூரணி தாம்போதி பாலத்தை மழைநீர் மூழ்கடித்து ஓடிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 2 Dec 2021 4:37 PM IST (Updated: 2 Dec 2021 4:37 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி இலுப்பையூரணி தாம்போதி பாலத்தை மழைநீர் மூழ்கடித்து ஓடிவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கனமழையால் இலுப்பையூரணி தாம்போதி பாலத்தை மூழ்கடித்து மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
தாம்போதி பாலம் மூழ்கியது
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதில் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி நீராவிக்குளம்  நிரம்பி வழிவதால்,  வரத்து ஓடை தண்ணீர் கணபதிபட்டி சாலையிலுள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்து மழை தண்ணீர் ஓடுகிறது. சுமார் 3 அடி உயரத்துக்கு பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அவதி
நேற்று மாலை வரை தொடர்ந்து ஓடைத்தண்ணீர் வருவதால் பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்களும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கு தாம்போதி பாலத்தை கடந்து கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சிலர் ஆபத்தான வகையில் பாலத்தில் ஓடும் தண்ணீரை கடந்து சென்று வருகின்றனர். 
இலுப்பையூரணி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கத்தினர், பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி தாம்போதி பாலத்தை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவில்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கிரிஸ்டோபரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Next Story