உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 2 Dec 2021 7:06 PM IST (Updated: 2 Dec 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

உலக எய்ட்ஸ் தினம்

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய தன்னார்வ ரத்ததான விழா நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 21 நபர்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவி புரிந்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும், டாக்டர்களுக்கும், சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.

கையெழுத்து இயக்கம்

பின்னர், கலெக்டர் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார். அதைத்தொடர்ந்து, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், காசநோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி, குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் கௌரிசங்கர், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story