திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
கிராமப்புறங்களில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கன்னிவாடி:
ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் 66 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ரெட்டியார்சத்திரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் ே்பசும்போது, அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும். குற்றங்களை தடுக்க போலீசாருடன் கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் இன்னும் 10 நாட்களில் கேமராக்களை பொருத்த ஊராட்சி தலைவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரி அன்பரசு, கணேஷ் பிரபு, ராமமூர்த்தி, கந்தசாமி, ரவி, காமாட்சி அப்பன், கவுன்சிலர்கள் ரமேஷ், காளீஸ்வரி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன் மற்றும் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story