ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி


ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 Dec 2021 10:16 PM IST (Updated: 2 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பெரும்பாறை

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே, இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தொடர்மழை எதிரொலியாக, கடந்த 3 வாரத்துக்கும் மேலாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 22-ந்தேதி இந்த நீர்வீழ்ச்சியில் குளித்த தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கடேசன் (வயது 18) உயிரிழந்தார்.

இந்தசூழ்நிலையில் தற்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

பசுமை போர்த்திய சோலைக்கு இடையே வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல கண்களை கொள்ளை கொள்ளும் காட்சி காண்போரின் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. இதில் குளிப்பதற்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அங்கு வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் குளிக்கும் இவர்கள், ஆழமான பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story