675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலம் நீட்டிப்பு
675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி, டிச.3-
675 சுகாதார பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒப்பந்த பணியாளர்கள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முக்கிய கோப்பு களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரியில் மாநிலத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய 675 சுகாதார பணியாளர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களை மேலும் 90 நாட்களுக்கு மீண்டும் பணியில் அமர்த்தவும், அதற்கு செலவினமாக ரூ.3.51 கோடி ஒதுக்கீடு செய்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை வரைமுறைப் படுத்தவும் அவர்களது நலனை பாதுகாக்கவும், மாநிலங் களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979-ன்கீழ் உரிமம் வழங்கும் அதிகாரி களாக தொழிலாளர் அலுவலர் (அமலாக்கம்) புதுச்சேரியிலும், காரைக்காலில் தொழிலாளர் அலுவலரை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கோளரங்கம்
புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் திட்டங்கள், செயல்பாடுகளை மேம்படுத்தவும், டாக்டர் அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை பராமரிக்கவும் ரூ.90.47 லட்சம் நிதிக்கொடை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story