பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது


பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது
x
தினத்தந்தி 2 Dec 2021 10:35 PM IST (Updated: 2 Dec 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே பழமையான புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.

பெரியகுளம்: 

பெரியகுளம் அருகே தேனி சாலையில் டி.கள்ளிப்பட்டி என்னுமிடத்தில் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதற்கு எதிரே 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த மரம் திடீரென்று வேரோடு சாய்ந்தது. இதில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும் அந்த பகுதியில் இருந்த 2 வீடுகளின் சுவர்களும் இடிந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய துறையினர் அங்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையினரும் விரைந்து வந்து புளியமரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்ததால் மதுராபுரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 


Next Story