தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 2 Dec 2021 10:49 PM IST (Updated: 2 Dec 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னை சாகுபடி
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் கம்பு, சோளம், தினை, ராகி போன்ற சிறு தானியங்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் படிப்படியாக சிறுதானியங்கள் பயன்பாடு குறைந்து தமிழர் உணவில் மிக முக்கிய இடத்தை அரிசி சாதம் பிடித்தது. இதனால் சிறு தானிய உற்பத்தியும் படிப்படியாக குறைந்து. தற்போது நமது உணவு முறையில் அரிசி பயன்பாடு அதிகளவில் உள்ளது. ஆனாலும் விவசாயிகள் தற்போது தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
தொழிலாளர் பற்றாக்குறை
இன்றைய நிலையில் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கூலித்தொழிலாளர் பற்றாக்குறை ஆகும். கூலித் தொழிலாளர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க தீர்வு தேடும் விவசாயிகள் தேர்ந்தெடுப்பது தென்னை சாகுபடியாகும். தென்னை சாகுபடியைப் பொறுத்தவரை தொடர் பராமரிப்பு அறுவடை போன்றவற்றில் அதிகளவில் ஆட்கள் தேவை இல்லை. இதனால் குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது. இது தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு பயனளிப்பதாக உள்ளது. 
மேலும் தென்னையைசார்ந்த கொப்பரை தேங்காய் உற்பத்தியும் குடிமங்கலம் பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு மாறி வந்தனர். காய்கறி சாகுபடி தொழிலில் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும் குறுகிய காலத்தில் தொடர் வருவாய் என்ற அடிப்படையில் பலரும் காய்கறி சாகுபடி மேற் கொள்கின்றனர். ஒரு சில நேரங்களில் பருவம் தவறிய மழை பெய்து கெடுக்கிறது. இதுவும் விவசாயிகளின் காய்கறி சாகுபடியில் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணமாகும். இதன் காரணமாக தென்னை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story