வேலூரில் ரூ.5 கோடி மோசடி செய்த ஆசிரியை கைது
ரூ.5 கோடி மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
வேலூர்
ரூ.5 கோடி மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
ரூ.5 கோடி பெற்றனர்
வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் மலர்க்கொடி (வயது 50), கொசப்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வி (59), காட்பாடி திருநகர் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் ஜான்சிராணி (45). இவர்களிடம் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் மகேஸ்வரி (53), அவரது கணவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான தர்மலிங்கம் (59) மற்றும் தோட்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லதா (55) ஆகியோர் அறிமுகமாயினர்.
இவர்கள் மலர்க்கொடி, தமிழ்செல்வி, ஜான்சிராணி ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றனர். அதன்படி, மலர்க்கொடியிடம் ரூ.45 லட்சமும், ஜான்சிராணியிடம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரமும், தமிழ்ச்செல்வியிடம் ரூ.2 கோடியே 50 லட்சமும் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆசிரியை கைது
பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதை திருப்பிக் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மலர்க்கொடி உள்ளிட்ட 3 பேரும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகேஸ்வரி, தர்மலிங்கம், லதா மற்றும் உடந்தையாக இருந்ததாக மகேஸ்வரியின் மகள்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story