கலவையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்
கலவையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் முதல் வார்டில் வசிக்கும் சிறுவனுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திமிரி வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராஜ் தலைமையில், வளையாத்தூர் மருத்துவர் மகேஸ்வரன், இளநிலை உதவியாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பிரபு, பேரூராட்சி துப்புரவு பணியாளர் ரங்கநாதன் ஆகியோர் அந்தப்பகுதிக்கு சென்று வீட்டில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை சுத்தம் செய்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும் என கூறினர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story