சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை


சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 2 Dec 2021 11:28 PM IST (Updated: 2 Dec 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

காரைக்குடி
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை, காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி
காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை, கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
மேலும் சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் 11 மணி வரை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நகர் பகுதிகள், மருதுபாண்டியர் நகர், வாரச்சந்தை ரோடு, புது நீதிமன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோல 11 மணி முதல் 2 மணி வரை செந்தமிழ் நகர், புதுர், மஜீத்ரோடு, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்

Next Story