பட்டாபிராமர் கோவில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் இந்துசமய அறநிலையத்திற்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக சுதர்சன ஹோமம், சாந்தி ஹோமம், யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் பாஸ்கரன், தக்கார் தேவி ஆகியோர் செய்திருந்தனர்.
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
Related Tags :
Next Story