மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2021 7:09 PM GMT (Updated: 2 Dec 2021 7:09 PM GMT)

திருத்தங்கல் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கூறினர். இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை திடீரென திருத்தங்கல் பகுதிக்கு சென்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பலர் குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், வாருகால் வசதி போன்றவை குறித்து கோரிக்கை வைத்தனர். சிலர் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகி உதயசூரியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story