வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியது


வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியது
x
தினத்தந்தி 3 Dec 2021 12:50 AM IST (Updated: 3 Dec 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

12 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாத்தூர், 
12 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
தொடர்மழை 
தொடர் மழையினால் சாத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி இருக்கன்குடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல தொடர் மழையால் வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியுள்ளது. 
இந்த கண்மாய் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ளது. இந்த கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் எண்ணற்ற கண்மாய்கள் நிரம்பியும், நிரம்பும் தருவாயிலும் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டாம்குளம் கண்மாய் நிரம்பியது. 
கண்மாய்கள் நிரம்பின 
இதன் மூலம் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இருப்பினும் காலம் தவறி நிரம்பிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் சற்று ஏமாற்றத்துடன் உள்ளனர். சாத்தூர் நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த மழை பெரிதும் உதவியாக இருந்தது. 
மேலும் தொடர் மழையால் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்வதால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோல வேண்டாம்குளம் கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் உள்ளிட்ட மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story