சாலை மறியலில் ஈடுபட்ட 161 பேர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட 161 பேர் கைது செய்யப்பட்டனர்
மலைக்கோட்டை
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் பணப்பயன்கள் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் நேற்று திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் விற்பனை நிலையம் அருகே கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கட்டுமான சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 161 பேரை கோட்டை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story