வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மறித்து கிருஷ்ணகுமார் (வயது 22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான கிருஷ்ணகுமார் மீது திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கிருஷ்ணகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story