தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மூத்தாகுறிச்சி கிராமத்தில் உள்ள கொல்லடிக்கொல்லை தெருவில் தார்ச்சாலை கிடையாது. செம்மண் பாதையானது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மூத்தாகுறிச்சி.
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
கும்பகோணம் 44-வது வார்டு ஆணைக்காரன்பாளையத்தில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் மழைக்காலம் என்பதால் சாலையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கழிவு நீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், ஆணைக்காரன்பாளையம்.
Related Tags :
Next Story