கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
தர்மபுரி, டிச.3-
தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலாவதி, மாவட்ட பொருளாளர் ரோஜா ரமணி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 51 பேரை கைது செய்தனர்.
வரியை குறைக்க வேண்டும்
போராட்டத்தின் போது, கட்டுமானப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு குறைக்க வேண்டும். அதன் மூலம் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
கட்டுமான தொழில் தொடர்பான தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கூடாது. கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story