நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் சேலத்தில் அண்ணாமலை பேட்டி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும்  அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் சேலத்தில் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 2:16 AM IST (Updated: 3 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சேலத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சேலம்,
அண்ணாமலை பேட்டி
சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுக்கவில்லை. தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக அ.தி.மு.க. மீது குறை கூறுகிறது. உரிய ஆதாரம் இல்லாமல் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. 
கூட்டணி தொடரும்
பெட்ரோல்-டீசல் விலை குறித்து மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அதன் விலை ரூ.60-க்கு கீழ் வரும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த ஊழல் பணத்தை திருப்பி எடுத்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். குழப்பம் இல்லாமல் எங்களது கூட்டணி தொடர்கிறது. 
தமிழ் புத்தாண்டு விவகாரத்தில் தி.மு.க. அரசு மக்களை குழப்புகிறது. வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே தமிழ் புத்தாண்டு தேதியை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story