கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்


கூட்டுறவுத்துறை மூலம்  பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 2:24 AM IST (Updated: 3 Dec 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்,
பயிர்க்கடன்
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்திற்கு கூட்டுறவுத்துறையின் மூலம் ரூ.630 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர்க்கடன் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சங்கங்களை அணுகி உரிய ஆவணங்கள் அளித்து தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அந்தந்த பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. 
ஆவணங்கள்
இதுவரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்று கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். பயிர்க்கடனாக தனிநபர் ஜாமீனில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமான கடனாக ரூ.3 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. பயிர்க்கடன் பெற ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அடங்கல், நில உடைமை தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் சான்று, கணினி சிட்டா ஆகியவற்றுடன் தங்களது விவகார எல்லையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தகுதியின் அடிப்படையில் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம். 
உரிய காலத்தில் பயிர்க்கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story