காவலாளி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
கன்னியாகுமரி அருகே காவலாளி வீட்டில் 18 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே காவலாளி வீட்டில் 18 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 பவுன் திருட்டு
கன்னியாகுமரி அருகே லீபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 58), காவலாளி. இவருடைய மனைவி புஷ்பம் (54), மகள் சங்கீதா (25). நேற்று காலையில் செல்லப்பன் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு புஷ்பம் தன்னுடைய மகளுடன் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த சங்கீதாவின் 18 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போனதை கண்டு திடுக்கிட்டனர்.
கைரேகை பதிவு
ஆனால் பீரோவுக்கான சாவி இருந்த இடத்திலேயே இருந்தது. திருட்டு நடந்ததற்கான அடையாளமே இல்லை. எனினும் நகையும், பணமும் கொள்ளை போனதால், மர்மநபர் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து கைவரிசை காட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது. அதே சமயத்தில் பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடு போகவில்லை.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story